திமுகவின் கொள்கையே அவர்களது குடும்பம் தான்- கோவை வந்த மோடி விமர்சனம்…

கோவை: திமுகவின் கொள்கையே அவர்களது குடும்பம் தான் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

Advertisement

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரது பெயரையும் குறிப்பிட்டார். என் அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். கோவை கோனியம்மன் மருதமலை முருகன் இரு கடவுள்களையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி அனைவரும் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருவதாகவும் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை புதிய சக்தியை கொண்டு வருவது இந்த வேலையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது அது என்னவென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி திமுகவின் வெளியேற்றம் என்று தெரிவித்தார். கோவை மக்கள் எப்பொழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள் அதனால் தான் எப்பொழுது வந்தாலும் நான் உங்களின் ஒருவனாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement

2023 பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றினோம் இந்த மாதம் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அடியெடுப்பை எடுத்து வைத்தோம் தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொரு கட்சியினர்களிடமும் கூட இது பற்றி ஆதரவு கூறினேன் என்று தெரிவித்த அவர் என்னைப் பொறுத்தவரை சாதாரண குடும்பங்களை சேர்ந்த சகோதரிகள் நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் அதிக எண்ணிக்கையில் செல்ல வேண்டும் என்பதுதான் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வரலாற்று முயற்சி தோல்வி அடைந்தது, திமுக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெறுப்பு அரசியலுக்கு அதனை இறையாக்கி விட்டார்கள் என்று தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தால் சாதாரண குடும்பங்களை சேர்ந்த பல பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆகியிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டிற்கு அதிக இருகைகள் கிடைப்பதாக இருந்தது ஆனால் அதனை திமுக விரும்பவில்லை. திமுக அவர்களது கெட்ட செயல்களில் இருந்து தப்பவே முடியாது மக்கள் உங்களது உண்மையான முகங்களை தெரிந்து கொண்டு விட்டார்கள் என்றார். இது எங்களுடைய போராட்டத்தின் முடிவு அல்ல ஆரம்பம் என்று குறிப்பிட்ட அவர் தேசிய ஜனநாயக கூட்டணி உங்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் என்றும் கூறினார்.

Advertisement

இந்த இட ஒதுக்கீடு குறித்து நாட்டு மக்களிடம் விரிவாக பேச உள்ளேன் என்றும் தெரிவித்தார். தற்பொழுது பெருமையாக பேசிக் கொள்வதற்கு திமுகவிடம் எந்த ஒரு சாதனையும் கிடையாது குற்றம் சொல்வதற்கும் எந்த ஒரு பிரச்சனையும் இங்கு இல்லை அதனால் தான் இந்த இட ஒதுக்கீட்டில் பொய்யான பரப்புரைகளை துவக்கி உள்ளார்கள் என்று தெரிவித்தார். சாதாரண பெண்கள் உயரத்திற்கு சென்றால் ஏன் திமுக விற்கும் காங்கிரசிற்கும் எரிகிறது? ஏனென்றால் இந்த ஒற்றை குடும்ப கட்சிகள் அதிகாரம் தங்களுடைய குடும்பங்களுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தைகள் குற்றவாளிகளால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் வன்முறை மற்றும் குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதால் பெண்களுக்கு திமுக தீங்கு இழைக்கிறது என்று கூறினார்.

பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிறுமி அவர் வரைந்த மோடியின் புகைப்படத்தை காண்பித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது பிரதமர் மோடி அதனை வாங்கி வரும்படி அவரது பாதுகாவலர்களுக்கு தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் திமுகவினரை பார்க்கும் பொழுது கேள்வி எழுப்புங்கள் என்றார். இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கியமான எஞ்சின் ஆக தமிழ்நாட்டை பார்க்கிறேன் என்றும் கடந்த 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்துள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு விஷயங்கள் சாதனை அளவை எட்டியுள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி அதில் ஒன்று குடும்பத்தின் சொத்து இரண்டாவது தமிழ்நாட்டின் கடன் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் உச்சபட்ச குடும்பம் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் இருக்கின்ற கடன் மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்கிறது என்று தெரிவித்தார்.

திமுகவின் கொள்கை என்பது என்னவென்றால் குடும்பத்திற்கு குடும்பத்தால் குடும்பத்திற்காக அவ்வளவுதான் என்றும், முதலமைச்சர் துணை முதலமைச்சர் டெல்லியில் உள்ள எம்பிக்கள் திரைத்துறை ஊடகம் போன்ற பல்வேறு துறைகளை ஒரே குடும்பத்தினர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என்றார்.

இங்கு ஒரு குடும்பத்திற்குள் ஒரு போட்டா போட்டி நிலவுகிறது அது என்னவென்றால் மகனுக்கும் மருமகனுக்கும் இடையில் நடக்கும் போட்டி அது யார் அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள் என்பதில் தான் என்று தெரிவித்தார். இந்தியா ஒரு மகனால் மருமகனால் சலித்து போய்விட்டது இன்னொரு மருமகனால் தமிழ்நாடு சலித்து போய்விட்டது இந்த இரண்டு குடும்பங்களின் ஊழல்களால் மக்கள் வேதனைகளில் உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

அரசியல் பின்புலம் இல்லாமல் உழைப்பால் துணை குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சிபி ராதா கிருஷ்ணன் என்று பெருமை தெரிவித்தார். திமுகவின் ரவுடிசி அரசியலை மக்கள் என்றென்றும் புறக்கணித்து வந்துள்ளார்கள் அதனால் தான் கோவையை அரசியல் பலி வாங்கும் நட்புடன் திமுக அணுகி வந்திருக்கிறது என்றும் திமுகவின் உச்சபட்ச குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் கோவை மக்களை சில மாதங்களுக்கு முன்னால் எவ்வளவு அவமானம் செய்தார் என்று நினைவு உள்ளது என்று தெரிவித்தார்.

டாஸ்மாக் ஊழல் போன்ற பெரிய ஊழல் மோசடிக்கு பேர் போன ஒரு ஊழல்வாதியை கோவைக்கு அனுப்பி உள்ளார்கள் என்று செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார். டபுள் எஞ்சின் அரசாங்கம் இருக்கும் பொழுது பல்வேறு திட்டங்கள் விரைவாக கிடைக்கும் என்றும் அதற்கு எடுத்துக்காட்டு சூரிய ஒளி மின்சாரம் போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.

இந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளோம் என்றும் இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்று தெரிவித்தார். மேலும் மக்களின் சேமிப்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ திட்டங்கள் மருந்தகங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீர் செய்வோம் என்றும், மாபியா கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதை இல்லாத தமிழ்நாடு உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் இடம் மாறுதலுக்கு பணம் பெறுவது பண மோசடி ஊழல் ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவோம் என்றும் திமுக செய்துள்ள அனைத்து மோசடிகளையும் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இங்கு உள்ள அனைத்து நியமனங்களும் ஒளிவு மறைவு இன்றி நடைபெறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்று தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் குறிப்பாக முதல் முறை வாக்காளர்களை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விளக்கி சொல்ல வேண்டும் திமுகவின் தோல்விகளை எடுத்துக் கூற வேண்டும் இந்த தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியது என்று எடுத்துக் கூற வேண்டும் என்று தெரிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி ஒவ்வொரு பூத்திலும் வரலாறு காணாத வாக்களிப்பு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...