என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்… மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் டுவிஸ்ட்!

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்டா விவகாரம் முடிவுக்கு வந்ததாக நினைத்த நிலையில் மீண்டும் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

Advertisement

மாதம்பட்டிக்கு ஷாக் கொடுத்த ஜாய்

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த ஆண்டு பெரிதும் பேசப்பட்ட நபராக மாறினார். அவர்மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகைப்படங்கள்., இருவரும் ஒன்றாக சேர்ந்திருந்த ரீல்ஸ்கள் இணையத்தில் வேகமாக பரவின. ஆனால் இது குறித்து மாதம்பட்டியார் எந்த பதிலும்சொல்லவில்லை.

Madhampatt

ஆனால், அவரது முதல் மனைவி ஸ்ருதி தனது கணவருக்கு முழு ஆதரவு அளித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன; பெண்கள் இவ்வாறு ஆதரிப்பதால் தான் ஆண்கள் செய்யும் தவறுகளை பொருட்படுத்தவில்லை என்ற கருத்துகளும் பரவின.

Advertisement

டிஎன்ஏ பரிசோதனையில் டுவிஸ்ட்

இந்த நிலையில் மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையில் ஸ்ருதியும் ரங்கராஜுடன் இணைந்து ஆஜரானது கவனத்தை ஈர்த்தது. வக்கீலான அவர், டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டால் அந்தக் குழந்தையை ஏற்கத் தயார் என தெரிவித்தார்.

Rangaraj

பின்னர் நடைபெற்ற பரிசோதனையில், அந்தக் குழந்தையின் தந்தை ரங்கராஜ்தான் என்பதும் உறுதியாகியது. இதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என பலர் நினைத்தனர்.

Advertisement

ஆனால் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ரங்கராஜ் தனது மகளை ஏற்றுக்கொண்டதாகவும், வாழ்நாள் முழுவதும் அவருடன் இருப்பதாகவும் கூறினார். மேலும், குழந்தை பேசுவது போல வெளியிட்ட மற்றொரு பதிவில், தந்தை தன்னை எப்போதும் விட்டு செல்லமாட்டேன் என உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டது.

ஜாய் கிரிசில்டா பதிலடி

இதற்கு பதிலளித்த ஸ்ருதி, தனது குடும்பத்தை தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவேன் என கடுமையாக பதிவிட்டார்.

Shruthi Vs Joy

அதற்கு ரிப்ளை செய்த ஜாய், குழந்தை கைகளை போட்டோவாக எடுத்து பதிவிட்டு, தூங்குபவர்களை எழுப்பலாம்.

தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. பொய்களுக்கு துணை போவது தான் அவமானத்தில் அடையாளம், நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்தாலும் பரவாயில்லை, நீதிமன்றத்தில் ஆதாரங்கள் உள்ளன என்றும், உருட்டு உருட்டு நல்லா உருட்டு என பதிவிட்டுள்ளார்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...