தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா- நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை: தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேர்த்திக்கடன் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் பால்குடம் கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோனியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய இந்த நேர்த்திக்கடன் ஊர்வலம் டவுன்ஹால், நஞ்சப்பாசாலை வழியாக வந்து தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

Advertisement

வழி நெடுகும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களும் பொதுமக்களும் குடிநீர் பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்வை முன்னிட்டு இப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...