திருமணம் செய்யாமல் குழந்தையை பெற முடிவெடுத்த மகள்… பிரபல நடிகர் க்ரீன் சிக்னல்!

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ள மகளுக்கு தந்தை நடிகர் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

நடிகர் சத்யராஜ் என கூறினால், இந்திய சினிமாவுக்கே நன்று பரிச்சயம் தான். அவர் அத்தனை மொழிகளிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர்.

Advertisement
Divya

அவரின் மகள் தான் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக உள்ள அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தந்தையை போல முற்போக்கு சிந்தனையை கொண்டவர்.

சமீபத்திய பேட்டியில் பேசிய திவ்யா சத்யராஜ் தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், சாதி மதம் விரும்பாதவள் நான், ஜாதகத்தில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் இதுவரை எனக்கு ஜாதகமே அவர் எழுதவில்லை.

Advertisement

திருமணம் என்பது தனி நபர் விருப்பம். திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Divya Sathyaraj

இருவரும் தனித்தனியே வசிக்கலாம். திருமணம் செய்து கொண்டு உடனே குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதும் இல்லை. நான் கடந்த காலங்களில் காதலித்தேன். அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

Advertisement

இருப்பினும் நான் ராஜா ராணி படம் நயன்தாராவை போல அப்பாவிடம் சொல்லி அழவில்லை. தனியாக அழுதேன். காதல் முறிவால் நான் தோல்வியடையவில்லை.

என்னுடைய விருப்பத்தை என் அப்பா நிச்சயம் ஏற்றுக்கொள்வார். அவரும் பெரியார்வாதி, கடவுளை வணங்காதவர் என்பதால் என் முடிவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார். திருமணம் செய்யாமல் குந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

Sathyaraj Daughter

நான் திருமணம் செய்யலாமா, வேண்டாமா என்பதில் என் அப்பாவுக்கு எந்த அழுத்தமும் இல்லை. அவருக்கு முக்கியமானது என்னுடைய மனநிறைவு தான். நான் திருமணம் செய்து கொண்டால் அதில் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று உணர்ந்தால், அதுவே அவருக்கு மகிழ்ச்சி. அதற்கு மாறாக, நான் தனியாக வாழ்ந்தால் தான் அமைதியாக இருக்க முடியும் என்று நினைத்தால், அதையும் அவர் முழுமையாக ஏற்றுக் கொள்வார்,” என்று அந்த பேட்டியில் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். என கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளுக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் பெரியார்வாதி, சாதி சடங்குகளில் விருப்பமில்லாதவன்.

Sathyaraj and divya

இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றெடுக்கலாம், அதற்கேற்ப ஏராளமான மருத்துவ வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மகளின் முடிவுகளுக்கு நான் எப்போதும் முழுமையாக ஆதரவு தருவேன் என சத்யராஜ் பளிச்சென கூறியுள்ளார்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ரூ.634 கோடி ஊழல்… வசமாக சிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகைகள்… யார் யார் தெரியுமா?

கோவை: தமிழகத்தை உலுக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.634 கோடி ஊழல் குற்றச்சாட்டில், பல்வேறு நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் சின்னத்திரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், எந்தெந்த நடிகைகள் சிக்கப்போகிறார்கள்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...