கோவையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு களப்பயணம் துவக்கம்…

கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில், உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயண நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

Advertisement

கோவை மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மாணவர்களுக்கான பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2026–2027-ம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் 11,125 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண்மைப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என 70-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Advertisement

இதில் 248 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கும், 60 மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரிக்கும், 60 மாணவர்கள் பொறியியல் கல்லூரிக்கும், 45 மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கும், 450 மாணவர்கள் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இப்பயணம் நவம்பர் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

Advertisement

களப்பயணத்தின்போது மாணவர்கள் கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதிகள் மற்றும் உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை நேரில் பார்வையிட உள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டி ஆசிரியர்களுடன் அழைத்துச் சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர், பிளஸ் 2 முடித்த பிறகு தேர்வு செய்ய வேண்டிய உயர்கல்விப் படிப்புகள், அவற்றின் எதிர்கால வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசின் கல்விச் சலுகைகள் குறித்து விளக்கினார்.

மேலும், பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிச் சூழலை நேரில் அறிந்து, போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்று, தங்களுக்குப் பொருத்தமான உயர்கல்வியைத் தேர்வு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகீர்த்தி, துணை ஆட்சியரும் மாவட்ட உயர்கல்வி கட்டுப்பாட்டு மையப் பொறுப்பு அலுவலருமான சந்த்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...