கோவையில் மீனவ பயனாளிகளுக்கு விலையில்லா வாகனம் வழங்கப்பட்டது…

கோவை: கோவையில் 14 மீனவ பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 மீனவ பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.20 லட்சம் மானியத்தில் விலையில்லா இருசக்கர வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீனவ பயனாளிகளுக்கு தலைக்கவசத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.75,272 என நிர்ணயிக்கப்பட்டு, 40 சதவீத மானியமாக ஒரு பயனாளிக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. இதன்படி, 14 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.20 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் வேலுசாமி, உதவி இயக்குநர் அஸ்வத் ஜெல்லா மற்றும் மாவட்ட மீன்வள அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...