வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை: கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம், சுங்கம் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 40 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அபிஷேக் (31) என்பவர் கடந்த மூன்று மாதங்களாக நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் இருப்பை அபிஷேக் சரிபார்த்துள்ளார். அப்போது, ஆப்பிள் மேக்புக், கேமிங் லேப்டாப், ஆறு ஐபோன்கள், இரண்டு ஸ்மார்ட் வாட்ச்கள், இரண்டு விலை உயர்ந்த குளிர்கண்ணாடிகள் மற்றும் டென்டல் கிட் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், நிறுவனத்தில் டீம் லீடராகப் பணிபுரிந்து வந்த வேல்முருகன் என்பவர் பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அரியலூர் மாவட்டம் கள்ளத்தூர் கிராமம், தண்டலை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், மூன்று வாரங்களாக நிறுவனத்தில் இருந்த லேப்டாப்கள், ஐபோன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திட்டமிட்டு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலாளர் அபிஷேக் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வேல்முருகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு களப்பயணம் துவக்கம்…

கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில்,...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...