கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பிய கைதி… கேரளா, ஈரோடு விரைந்த தனிப்படை

கோவை : கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து போலீசாரைத் தள்ளிவிட்டுத் தப்பிய கைதி ராகவனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், ஈரோடு மற்றும் கேரளாவில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் நஞ்சப்பா சாலையில் லாரியில் ஏறிச் சென்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் ராகவன் என்ற கோழிக்காரன் (25). இவர் மீது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. ஈரோட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசார் ராகவனைக் கைது செய்து, கோவை மத்திய சிறையில் இருந்து கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனம் அன்னூர் அருகே சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி ராகவன் கீழே இறங்கியுள்ளார். அப்போது போலீசாரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக போலீசார் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். தொடர்ந்து, ராகவன் பவானியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த அன்னூர் போலீசார், அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

Advertisement

பின்னர், நள்ளிரவு 1 மணியளவில் அவரை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரைத் தள்ளிவிட்ட ராகவன், சிறை வளாகத்தில் இருந்து மீண்டும் தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகவனைப் பிடிக்க மாவட்ட மற்றும் மாநகர போலீசார் அடங்கிய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

தனிப்படையினர் சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அவர் தப்பிச் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், சிறை வளாகத்தில் இருந்து தப்பிய ராகவன், நஞ்சப்பா சாலைக்குச் சென்று, அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் ஏறிச் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த லாரியின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

லாரி எந்த வழித்தடத்தில் சென்றது, ராகவன் எங்கு இறங்கினார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனிப்படையினர் ஈரோடு, கேரளா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அவரைத் தேடி வருகின்றனர்.

ராகவனைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் அவரைப் பிடித்துவிடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...