அறைக் கதவை உடைத்து இளைஞர்கள் மீது தாக்குதல்…! கோவையில் பயங்கரம்!

கோவை: கோவை குனியமுத்தூரில் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, இளைஞர்களை ஹெல்மெட் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (20). இவர், கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி வேலை செய்து வருகிறார்.

Advertisement

சம்பவத்தன்று இரவு வைத்தீஸ்வரன் தனது நண்பர்களுடன் அறையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான கார்த்திகேயன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல், அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் வைத்தீஸ்வரனையும் அவரது நண்பர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்டபோது, அந்தக் கும்பல் தாங்கள் கொண்டுவந்திருந்த ஹெல்மெட், இரும்புக் கம்பி ஆகியவற்றாலும், கைகளாலும் கால்களாலும் அவர்களைச் சரமாரியாகத் தாக்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தத் தாக்குதலில் வைத்தீஸ்வரனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. தொடர்ந்து, இரும்புக் கம்பியைக் காட்டி, அங்கு தங்கியிருந்தால் உயிரோடு விடமாட்டோம் என மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

காயமடைந்த வைத்தீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராஜா என்ற ராஜராஜன், ஹரி என்ற ஹரிஹரன், விஷ்வா, சரண், நிருபன், கார்த்திகேயன், விபினித் மாணிக்கம், கேசவ மூர்த்தி, பவந்த், அப்துல் ரகுமான், தருண்குமார், ராஜ்குமார் ஆகிய 12 பேர் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...