கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…

கோவை: கோவை மாவட்ட வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்ட டாஸ்மாக் ஊழியர்களால் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பீளமேடு பகுதியில் உள்ள வாணிபக் கழக அலுவலகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.

அரசு நடத்தும் மதுபான கடைகளில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், கடைகளில் கூடுதல் இடவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மது பாட்டில்களில் EBC ஸ்டிக்கர் 100% ஒட்டி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் முறையை சீர்செய்து அவுட்சோர்சிங் முறையில் அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பல மாதங்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யும் நடைமுறையை அப்டேட் செய்து மூன்று முறை ஸ்கேன் செய்வது போல நடைமுறைப்படுத்த உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கிடங்கு வாணிபக் கழக அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்திற்குள் அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், இங்குள்ள மண்டல மேலாளர் கோவிந்தராசு மிகவும் அதிகாரத் தொணியில் நடந்து கொள்வதாக கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், மண்டல மேலாளர் கோவிந்தராசு அதிகாரத் தொணியில் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், அவருக்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...