திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ள மகளுக்கு தந்தை நடிகர் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
புரட்சி நாயகன் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் என கூறினால், இந்திய சினிமாவுக்கே நன்று பரிச்சயம் தான். அவர் அத்தனை மொழிகளிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர்.

அவரின் மகள் தான் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக உள்ள அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தந்தையை போல முற்போக்கு சிந்தனையை கொண்டவர்.
காதல் தோல்வி குறித்து திவ்யா
சமீபத்திய பேட்டியில் பேசிய திவ்யா சத்யராஜ் தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், சாதி மதம் விரும்பாதவள் நான், ஜாதகத்தில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் இதுவரை எனக்கு ஜாதகமே அவர் எழுதவில்லை.
திருமணம் என்பது தனி நபர் விருப்பம். திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இருவரும் தனித்தனியே வசிக்கலாம். திருமணம் செய்து கொண்டு உடனே குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதும் இல்லை. நான் கடந்த காலங்களில் காதலித்தேன். அந்த காதல் தோல்வியில் முடிந்தது.
இருப்பினும் நான் ராஜா ராணி படம் நயன்தாராவை போல அப்பாவிடம் சொல்லி அழவில்லை. தனியாக அழுதேன். காதல் முறிவால் நான் தோல்வியடையவில்லை.
குழந்தை பெற்றுக்கொள்ள தயார்
என்னுடைய விருப்பத்தை என் அப்பா நிச்சயம் ஏற்றுக்கொள்வார். அவரும் பெரியார்வாதி, கடவுளை வணங்காதவர் என்பதால் என் முடிவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார். திருமணம் செய்யாமல் குந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

நான் திருமணம் செய்யலாமா, வேண்டாமா என்பதில் என் அப்பாவுக்கு எந்த அழுத்தமும் இல்லை. அவருக்கு முக்கியமானது என்னுடைய மனநிறைவு தான். நான் திருமணம் செய்து கொண்டால் அதில் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று உணர்ந்தால், அதுவே அவருக்கு மகிழ்ச்சி. அதற்கு மாறாக, நான் தனியாக வாழ்ந்தால் தான் அமைதியாக இருக்க முடியும் என்று நினைத்தால், அதையும் அவர் முழுமையாக ஏற்றுக் கொள்வார்,” என்று அந்த பேட்டியில் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். என கூறியிருந்தார்.
மகளுக்கு ஆதரவு
இந்த நிலையில் மகளுக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் பெரியார்வாதி, சாதி சடங்குகளில் விருப்பமில்லாதவன்.

இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றெடுக்கலாம், அதற்கேற்ப ஏராளமான மருத்துவ வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மகளின் முடிவுகளுக்கு நான் எப்போதும் முழுமையாக ஆதரவு தருவேன் என சத்யராஜ் பளிச்சென கூறியுள்ளார்.


