உறவினர் வீட்டில் விட்டு சென்ற 1½ வயது குழந்தை மர்ம மரணம் : தவறி விழுந்ததா?

கோவை: கோவையில் 1½ வயது குழந்தை உறவினர் வீட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜகரங்கா மற்றும் அவரது மனைவி சாந்திமம்பலகா (22) ஆகியோர் கோவை இருகூரில் தங்கி, குரும்பபாளையம் சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று, சாந்திமம்பலகா தனது 1½ வயது மகள் அனிஷாவை உறவினர் வீட்டில் விட்டு வைத்து வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பின்னர், குழந்தை பேசும், சுவாசிக்கும் அறிகுறிகள் இன்றி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...