கோவை: கோவையில் PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஆண்டு ஆராய்ச்சி நாள் 2026 விழா, பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பாக நிறைவு பெற்றது.
கோவை PSG Institute of Medical Sciences and Research வளாகத்தில், PSG சுகாதார அறிவியல் நிறுவனங்களின் ஆண்டு ஆராய்ச்சி நாள் 2026 விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் PSG IMS&R முதல்வர் டாக்டர் டி. எம். சுப்பராவ் வரவேற்புரை வழங்கி, மருத்துவத் துறையில் ஆராய்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஆராய்ச்சி மற்றும் புதுமை இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கம், PSG நிறுவனங்களின் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் PSG மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ராமநாதன் மற்றும் IPSG நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெயதீபா ஆகியோரும் கலந்து கொண்டு ஆராய்ச்சியாளர்களை பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் PSG PRIME, PSG ஆராய்ச்சி விருதுகள், சிறந்த போஸ்டர் விருதுகள் மற்றும் சிறந்த ஆசிரியர் ஆராய்ச்சியாளர் விருதுகள் வழங்கப்பட்டு பலர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட Indian Council of Medical Research கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சங்கமித்ரா பாதி, பொதுசுகாதார வளர்ச்சியில் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இறுதியில் நன்றியுரை வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.
PSG சுகாதார அறிவியல் நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு முக்கியத்துவம் அளித்து, சமூக நலனுக்கான அறிவியல் முன்னேற்றத்தில் முன்னிலை வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


