கோவையில் ஜூனியர் ஹாக்கி போட்டி துவங்கியது…

கோவை: கோவை மற்றும் உடுமலைப்பேட்டையில் ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது.

Advertisement

ஜூன் மாதம் இறுதியில் கோவையில் நடைபெற உள்ள Junior Men National India Hockey போட்டிக்கான தமிழ்நாடு அளவிலான சிறந்த அணியை தேர்ந்தெடுக்கும் வகையில், 35 மாவட்ட அணிகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி போட்டி இன்று கோவை மற்றும் உடுமலைப்பேட்டையில் தொடங்கியுள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 17 மாவட்ட அணிகளும், உடுமலைப்பேட்டையில் 18 மாவட்ட அணிகளும் பங்கேற்றுள்ளன.

கோவையில் ஜூனியர் ஹாக்கி போட்டி துவங்கியது…

Advertisement

இவர்களுக்கான இறுதிப் போட்டி வரும் 2ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட 17 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

கோவை மற்றும் உடுமலைப்பேட்டையில் வெற்றி பெறும் அணிகளுக்கான காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...