“தூய்மைத் தேவதைகள் நீங்கள்!” – பணியாளர்களைப் பாராட்டிய கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.!

கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள், இனிப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதில், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் கீரணத்தம் ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பண்டிகைகளை அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்றும், உழைக்கும் பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

“நீங்கள் சாதாரணப் பணியாளர்கள் அல்ல; நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மைத் தேவதைகள். நீங்கள் செய்யும் பணியை வேறு யாராலும் எளிதில் செய்துவிட முடியாது. உங்கள் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் தலைவணங்குகிறேன்” எனப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டினார்.

மேலும், பணியாளர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறிய அவர், அவை விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவர்களுடன் தீபாவளி மகிழ்ச்சி பகிர்ந்துகொள்ளப்பட்டது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வேலை செய்த நிறுவனத்திலேயே திருட்டு- டீம் லீடருக்கு வலை

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களைத் திருடியதாக, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...