கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவை: கோவையில் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழையில் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி கோவையில் நேற்று காலையில் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது
.

கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் சிரமம் அடைந்தனர்.

அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடகம் சாலை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழை நீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.