ஜிடி மேம்பாலத்தில் இரவு நேர பயணத்திற்கு அனுமதி இல்லை

கோவை: ஜி டி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

கோவை ஜிடி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவில் பயணம் செய்ய அனுமதி இல்லை என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கோவை மாநகர் அவிநாசி சாலையில் உள்ள ஜிடி மேம்பாலத்தில் வருகின்ற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் Optical Fiber Cable பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக உயர்மட்ட மேம்பாலத்தில் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...