கோவையில் சோகம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை தேடும் போலீஸ்

கோவை: கோவை இருகூர் (Irugur) காந்தி நகர், சௌடேஸ்வரி நகர் ரயில்வே கேட் பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினாரா? அல்லது விளையாடச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததா? என்பது குறித்து உடனடி தகவல் தெரியவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சிறுவன் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவரது பெற்றோர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து, “இந்த சிறுவனை யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்” என போலீசார் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் முகவரி மற்றும் பெற்றோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...