கதவு இல்லாத பெண்கள் கழிவறை; கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அவலம்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதவு இல்லாத நிலையில் பெண்கள் கழிவறை இருப்பதால், அங்கு வரும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் கீழ் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்குள்ள பழைய கட்டடத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை உள்ளது.

இங்கு ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Advertisement

இதனிடையே, பெண்கள் கழிவறையின் முன்பக்க கதவு முழுமையாக சேதமடைந்து உடைந்து விழுந்துள்ளது.

இதனால், அங்கு வரும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement

கழிவறையில் புதிய கதவு பொருத்த வேண்டும் என்றும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைகளை தூய்மைப்படுத்துவதோடு, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...