பொறுப்பேற்றார் கோவையின் புதிய எஸ்.பி!

கோவை: கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, தாம்பரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பவன் குமார் ரெட்டியை, கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டார்.

Advertisement
Coimbatore new SP

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பவன் குமார் ரெட்டி, கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Breaking News: கோவை கோனியம்மன் கோயிலில் பரபரப்பு! உண்டியல் புகாரைத் தொடர்ந்து HR&CE அதிகாரிகள் ரெய்டு

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...