சூலூர் சிறுமி வழக்கு- கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

கோவை: சூலூர் சிறுமி வழக்கில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 சிறுமி இருவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் கைதானவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.

​கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கார்த்திக் காவல்துறையினரிடமிருந்து தப்பி செல்ல முயன்ற பொழுது கை கால்களில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement

​இதற்கு இடையே, சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டு கரத்திக் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது அதற்காக இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

மனுவை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். இதனை அடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி வாகனங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.