தமிழக பக்தர்களுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்- பேரூர் ஆதீனம்…

கோவை: தமிழக பக்தர்களுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும் என பேரூர் ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

அமர்நாத் செல்லும் தமிழக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரி துணைக் குடியரசுத் தலைவரிடம் பேரூர் ஆதீனம் மனு அளித்துள்ளார்.

பேரூர் ஆதீனம் 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ஆன்மிக மையமாக திகழ்ந்து வருகிறது. ஆதீனத்தின் சார்பில் தினந்தோறும் அடியார்களுக்கு அமுது செய்வித்தல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வட இந்தியாவில் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை வழங்க அனுமதி கோரி இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளதாக பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், அமர்நாத் யாத்திரைக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை கருத்தில் கொண்டு, இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அதற்கான அனுமதி கிடைத்தால், பஹல்காம் அருகே பக்தர்கள் பயன்பெறும் வகையில் உணவு வழங்கும் மையம் அமைக்கப்படும். இதன் மூலம் தென்னிந்திய பக்தர்கள் தங்களுக்கு பழக்கமான சைவ உணவுகளை எளிதாக பெற முடியும். மேலும், ஆன்மிக சேவையுடன் மனிதநேய சேவையையும் இணைத்து செயல்படுவது பேரூர் ஆதீனத்தின் நோக்கமாகும் என மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...