படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம்…

கோவை: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு துவங்க மானியம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக உருவாக்கும் பொருட்டு, அரசாணை எண்.80குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை. நாள் 30.07.2010-6 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (Unemployed Youth Employment Generation Programme UYEGP) மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.15. 00 இலட்சம் ஆகும். அதற்கான மானியம் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதாவது ரூ.3.75 இலட்சம் வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் இளைஞர்களின் வயது வரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 வயதிலிருந்து 55 வயதாக யர்த்தப்பட்டுள்ளது. பெண்கள்,பழங்குடியினர், பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயதிலிருந்து 45 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும்இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதற்கான ஆவணங்களை மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இந்நிதியாண்டிற்கு 53 பயனாளிகளுக்கு ரூ.87.95 இலட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக வியாபாரம் சார்ந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் 641001 தொலைபேசி 0422-2397311 தொடர்புக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…

கோவை: பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்புப் பதிவுச் சட்டம்1969 (2023ல் திருத்தப்பட்டது)பிரிவு 14 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025, விதி எண்...

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...