நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக உலா வந்ததும், அங்கு உள்ள தெரு நாய்கள் குரைத்ததால் அவை வேகமாகச் சாலையைக் கடந்து ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.

​மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குள் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் காட்டு யானைகள் புகுவது சமீபகாலமாகத் தொடர்கதையாகி வருகிறது.

இதன் நீட்சியாக, நள்ளிரவில் ஆலாந்துறை அருகே உள்ள பூண்டி – செம்மேடு சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் திடீரெனப் புகுந்தன.
​அமைதியாகச் சாலையில் உலா வந்த அந்த யானைகள், அங்கு இருந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அப்போது, அந்த வீதிகளில் இருந்த தெரு நாய்கள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு யானைகளைப் பார்த்து ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கின. நாய்கள் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்ததால் மிரட்சி அடைந்த அந்த இரண்டு காட்டு யானைகளும், குடியிருப்புப் பகுதிக்குள் செல்லாமல் பிரதான சாலையை மிக வேகமாகத் தாண்டி மீண்டும் வனப்பகுதியை நோக்கி ஓட்டம் பிடித்தன.

​யானைகள் சாலையில் உலா வருவதும், நாய்கள் குரைத்ததால் அவை வேகமாக ஓடுவதும் அங்கு இருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் (CCTV Footage) மிகத் துல்லியமாகப் பதிவாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் இடையே வைரலாகி வருகிறது.

​கோவை மாநகரையொட்டிய வடவள்ளி, சரவணம்பட்டி போன்ற பகுதிகளிலும் அண்மைக் காலங்களாக யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ள நிலையில், தற்போது ஆலாந்துறை பூண்டி சாலையிலும் யானைகள் உலா வந்து இருப்பது அப்பகுதி மக்களைக் கடுமையான அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே, வன எல்லையோரப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தினமும் யோகா செய்யுங்கள்- கோவையில் தமிழக ஆளுநர் அறிவுரை…

கோவை: கோவையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் ஆளுநர் பங்கேற்றார். சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர்...

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...