சுத்தமாகும் காந்தி மாநகர் ஓடை… நீரைப் பாதுகாக்க சிறுதுளி, பிஎஸ்ஜி முனைப்பு!

கோவை: சிறுதுளி, கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. குழுமம் இணைந்து காந்திமாநகர் ஓடை சீரமைப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளன. முதல் நளான இன்று ஏராளமான மாணவர்கள் ஜிவி ரெசிடென்சி பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

சிறுத்துளி அமைப்பானது கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோவை முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தொடங்கி, ஃபன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது.

நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி, பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுதுளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.

இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சிறுதுளி நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பிராணிகள் வதை தடுப்பு சங்கம்- உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்கள்…

கோவை: பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் முழு செயல்பாட்டில் செயல்படும்...

Video

நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில்...