கோவை: கோவையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.700 ஆக நிர்ணயிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், புதிய வி.பி.ஜி. ராம்ஜி சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதியை குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
மாவட்ட செயலாளர் ஆர். துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.



