கிறித்துவ தேவாலய பணியாளர்கள், உபதேசியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, சமச்சடங்கு செலவிற்கான தவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குகண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகின்றது.

இந்த உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள் சீசபிள்ளைகள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள்தொழுநோயாளியர், மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணைய தளம் (www.cwb.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் www.uwb.tn.gov.in இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...