கோவையில் துவங்கிய வேலைவாய்ப்பு முகாம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
வேலைவாய்ப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி 2026 நடைபெற்றது.

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தின் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான துவக்க விழா ஜீன் 23 அன்று அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

முதுநிலைப் பட்டமேற்படிப்பிற்கான முதன்மையர் முனைவர் சி.பாபுவேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் முனைவர் பராஜ்குமார், தோட்டக்கலை கல்லூரி முதன்மையர் முனைவர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

சத்யம் குழும நிறுவனங்களின் மனிதவள வணிகப் பங்குதாரர் விஜயராகவன் தனது சிறப்புரையில் வேளாண் தொழில் துறையின் தற்போதைய எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கமளித்து, எதிர்கால பட்டதாரிகள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் மற்றும் தகுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.

வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகனைச் சேர்ந்த 1224 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 65 வெவ்வேறு நிறுவனங்கள் 998 பணியிடங்களுக்காக ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் இன்று ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும். நிகழ்ச்சி துவங்கும் முன், பங்கேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் தேவைகள், மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் திறன்கள், பணியின் தன்மை, தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் மற்றும் சம்பள விவரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் மாணவர் நல மையப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்த முயற்சி- சூலூர் எம்.எல்.ஏ பேட்டி…

கோவை: கணியூர் விவகாரத்தில் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வதாக எம்.எல்.ஏ சுகுமார் தெரிவித்துள்ளார். கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...