கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள். கப்புகள் கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் முட்டையிட்டு அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.
வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும். டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகமலும் அதற்கு கட்டிடத்தின் அருகாமையில் தேங்காய் ஓடுகள். உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் உபயோகமற்ற உயர்கள் ஆகியவற்றை அகற்றிடவும் செடி வளர்க்கும் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஎஸ் கொசு சாக்கடை நீரில் வளராது. தூய தண்ணீரில் மட்டுமே வளரும். தக்கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். வீட்டின் உட்புறங்களில் உள்ள பிரிட்ஜ் டிரேயில் இருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஎஸ் கொசு முட்டையிட்டு, கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சமையல் மற்றும் குடிநீருக்கு பிடித்து வைக்கும் தண்ணீரின் கலன்களை மூடிவைத்து பராமத்திடவும் அதனை அடிக்கடி மாற்றிடவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளாண்ட் செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர விடுகிறோம். அந்த தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்புள்ளது. ஏர்கூலர் தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்பு உள்ளது. எனவே ஏர்கூலரை அடிக்கடி துடைத்து தண்ணீரை மாற்ற வேண்டும். கட்டிடத்தின் மேல்தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்ளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்களை திறந்த வெளியில் போடப்பட்டு இருந்தால் அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 8-வது வார்டில் மாஹாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகரில் மாநகராட்சி சுகாதார குழுவினரால் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டபோது கட்டிடத்தின் உட்பகுதியில் தரைத் தொட்டி லிப்ட் பிட், டிரம், குடம் ஆகிய இடங்களில் அதிப்படியான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அதனை உடனடியாக தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சம்மந்தப்பட்ட அந்த கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக பராமரித்து டெங்கு காய்ச்சல் உருவாவதை தடுப்பதில் விழிப்புணர்வுடன் பங்காற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.



