கோவையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; 60 வயது நபர் கைது

கோவை: கோவை அருகே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 60 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது தோழிகளுடன் விராலியூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அருணன் (60) என்பவரின் மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரை நலம் விசாரிப்பதற்காக நேற்று காலை இளம்பெண் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் இளம்பெண்ணிடம் அருணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன் மயங்கி விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சுகாதார பணிகள் தனியாரிடமா?- கோவையில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: மாநகராட்சி சுகாதார பணியை தனியார் ஒப்பந்ததிற்கு விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...