முதல்வர் விஜய் குறித்து அவதூறு- கோவையில் புகார்…

கோவை: தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ஜ கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

கோவை தமிழக வெற்றிக்கழக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சதீஷ் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது புகார் அளித்தனர்.

அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் விஜய் மீது திமுகவைச் சேர்ந்த 4 நபர்கள் வெவ்வேறு ஐ.டி. முகவரியிலிருந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்றும்
தமிழக முதல்வரைப் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் அவதூராக பேசி தமிழக முதல்வருக்கு நற்பெயர் மற்றும் நன்மதிப்பை கெடுக்கும் வண்ணம் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த வீடியோவை ரத்து செய்வதோடு அவர்களது இணையதள முகவரியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சுகாதார பணிகள் தனியாரிடமா?- கோவையில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: மாநகராட்சி சுகாதார பணியை தனியார் ஒப்பந்ததிற்கு விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...