மனைவியை கொலை செய்த கணவன்- மாமனார், சின்ன மாமனார் உதவி- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: மனைவியை மதுவில் விஷம் வைத்துக் கொன்று சடலத்தை மறைத்த கணவன் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை விஷம் வைத்துக் கொன்ற கணவர் மற்றும் அவரது தந்தை, சித்தப்பா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார் மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கருமத்தம்பட்டி அடுத்த மாதாப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். கடந்த 23-ம் தேதி மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவியைக் கொலை செய்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆனந்தகுமாரின் தந்தை ஆறுமுகம் மற்றும் சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் உதவியுடன், சடலத்தை ஒரு பையில் மூட்டை கட்டி மீன்பிடி வலையால் மூடி மறைத்து எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

Advertisement

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், ஆனந்தகுமார், தந்தை ஆறுமுகம், சித்தப்பா சுப்பிரமணி ஆகிய மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சுகாதார பணிகள் தனியாரிடமா?- கோவையில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: மாநகராட்சி சுகாதார பணியை தனியார் ஒப்பந்ததிற்கு விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள்...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...