கோவை: START RUN STOP DRUG விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் அரசு சார்பிலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு சார்பில் உலக பொது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சிகள் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜய் விழிப்புணர்வு மாரத்தானை துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கினார். இதில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் 5 கிமீ தொலைவிற்கு நடைபெற்றது.
இந்த மாரத்தான் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் START RUN STOP DRUG என்ற டிசர்ட் வழங்கப்பட்டது.



