‘பாகுபலியும் குடும்பத்தினரும்! பழங்குடியின கிராமதிற்கு படையெடுப்பு- பீதியில் மக்கள்…!

கோவை : கோவை மாவட்டம் மூலக்காடு பழங்குடியினர் கிராமத்தில், 3 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள மூலக்காடு கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் குடியிருப்பாகும். வறட்சி மற்றும் உணவு, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் அடிக்கடி இந்தப் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.

Also Read:ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video

நேற்று இதே பகுதியில் உள்ள பொதுத் தண்ணீர் தொட்டியில் ஒற்றை காட்டு யானை ஒன்று தண்ணீர் குடித்த காட்சி வைரலான நிலையில், இன்று அதே இடத்திற்கு 3 குட்டிகளுடன் மொத்தம் 7 யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது.

Advertisement

குட்டி யானைகளை நடுவில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைக் கூட்டம் கிராம எல்லைப் பகுதியில் உலா வந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

Wild Elephant Family in Coimbatore

குட்டிகளுடன் இருக்கும் யானைகள் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் ஆக்ரோஷமாக மாறும் வாய்ப்பு இருப்பதால், பழங்குடியினர் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Also Read: கோவையில் ஆபத்தான நிலை… இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை திடீர் உயர்வு

தற்போது யானைக் கூட்டம் கிராம எல்லைப் பகுதியில் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், கிராம மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...