ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video

கோவை: கோவையில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர்களின் கார், ஆட்டோ மீது மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். காரில் இருந்த 4 மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 மாணவர்கள், காரில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

கோவில்பாளையம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோவை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கார், ஆட்டோவின் பின்புறம் பலமாக மோதியது.

இந்த மோதலின் தாக்கத்தில் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி தலைக்குப்புறமாக கவிழ்ந்தது.

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், காரில் பயணித்த 4 கல்லூரி மாணவர்களும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தலைக்குப்புறமாக கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் அதிவேகமாக காரை இயக்கியதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஈஷா – கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...