கோவையில் அதிகாலையே அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறை..!

கோவை: கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அறிவுறுத்தரின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகள் பிற மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்தோர் தங்கி உள்ள இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா மளிகை மற்றும் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பேரூர் டி.எஸ்.பி சுரேஷ், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர், ஏடிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அங்கு போதைப்பொருள் ஏதேனும் உள்ளதா புகையிலைப் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா சட்டவிரோத செயல்கள் ஏதாவது நடைபெறுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாலை நடைபெறும் இந்த சோதனையால் சோதனை நடைபெறும் இடங்களில் சற்று பதற்றமான சூழல் நிலவியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் விடிய விடிய மழை- பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லாததால் அவதியுறும் மக்கள்…

கோவை: கோவை மாநகரில் அதிகாலை முதலில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கும் செல்வோர் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓர்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.