கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்சம்?- லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் பல்வேறு பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் சோதனையானது ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஓரிரு பகுதிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ADSP ராஜேஷ் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒன்பது போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...