கோவை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் இல்லை?- அதிமுக வழக்கறிஞர்களின் முக்கிய கோரிக்கை…

கோவை: தவெக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்தால் வரவேற்கிறோம் என்றும் உடனடியாக அரசாணை வழங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி உடன் அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் முடிவடைந்தது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் ஆரம்பித்து தற்பொழுது வரை கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் பல்வேறு கிழமை நீதிமன்றங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் பல்வேறு ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகவும் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து கோவை நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சட்டமன்றத் தேர்தல் முடிந்து கடந்த 60 நாட்களாக உட்கட்சி பிரச்சனை, கட்சி தாவல், குதிரை பேரம், சோபா மாடல், Blast Blast போன்ற செய்திகள் மட்டுமே அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன மக்கள் அதை மட்டுமே ரசித்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நீதிமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சனையை நிலவிக் கொண்டிருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் கடந்த 5 நாட்களாக நியமிக்கப்படாததால் பல்வேறு சிக்கல்கள் நிலவிவருவதாக குறிப்பிட்ட அவர் இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.

வரலாற்றில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டது கிடையாது என்றும் கூறினார். தற்பொழுது வரை அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாதது அரசு நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டிய அவர் இதனால் அரசியலமைப்பு சட்டம் வகுத்திருக்கக்கூடிய விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு குறிப்பிட்டு 24 வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க சொல்லுங்கள் என்று கூறியதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான அரசாணை வெளிவரும் என்று எண்ணியதாகவும் ஆனால் தற்போது வரை அரசாண எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

அமைச்சர் கீர்த்தனா கூட சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது அதற்கான கடிதத்தை அவர் எடுத்து வராததால் கடிதத்தை எடுத்து வந்தால் தான் பொறுப்பேற்க முடியும் என்று சட்டமன்ற செயல்பாட்டாளற் கூறினார் என்று தெரிவித்த அவர் சட்டமன்றத்திலேயே இவ்வாறான நடைமுறைகள் இருக்கும் பொழுது அரசாங்கத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் பொழுது போதிய கடிதங்கள் ஆவணங்கள் இல்லாமல் எப்படி பதவி ஏற்க சொன்னார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இது அரசாங்கத்தின் அறியாமை என்று குறிப்பிட முடியாது என்றும் இது கண்டிப்பாக துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக முதலமைச்சருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். அரசு வழக்கறிஞர்களை நியமிக்க முடியாமல் அரசாங்கத்திற்கு வேறு என்ன வேலை உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது என்று கூறிய அவர் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு வழக்கறிஞர்களாக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் அவர் அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் என்றும் யாருடைய அழுத்தத்தினால் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் பதவி கொடுத்தால் அவர்கள் அந்த பணியை செய்யட்டும் நான் அதனை வரவேற்கிறேன் ஆனால் அவர்களுக்கு அதற்குரிய அரசாணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்து உடனடியாக மாற்று ஏற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஐந்து நாட்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பிணை வழக்குகள், எண்ணில் அடங்கா சிவில் வழக்குகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.