மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கடனாளிகளாக்கிய பெண்- மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்…

கோவை: மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களது பெயர்களில் வங்கிகளின் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த கோபனாரி பகுதியில் வசித்து வரும் நித்தியா என்ற பெண்மணி அந்தப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தனது குழந்தைகளின் படிப்பிற்காக கடன் தேவைப்படுவதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறி

மலைவாழ் மக்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றையெல்லாம் கொண்டு வங்கிகளில் கடன் வாங்கி அதனை செலுத்தாமல் தங்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டதாக அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

இது குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், தங்கள் மக்கள் பலருக்கும் எழுத படிக்காது தெரியாது என்றும் எனவே தங்களை பயன்படுத்தி நித்தியா என்ற பெண் எங்களது ஆதார் கார்டு, Pan Card, வங்கிக் கணக்கியல் ஆகியவற்றையெல்லாம் வாங்கி பல்வேறு கடன்களை பெற்று அதனை செலுத்தாமல் தங்களைக் கடன் காரர்களாக மாற்றி விட்டதாகவும்

அதனால் அந்த பைனான்ஸ் நிறுவனத்தினர் வங்கியினர் எங்களிடம் கடனை செலுத்துமாறு கூறி நாள்தோறும் வற்புறுத்தி வருவதாக தெரிவித்தனர்.

Advertisement

அந்தப் பெண்மணிக்கு இதையே தான் வேலை என்றும் காசு மட்டும் அல்லாமல் சிலரிடம் நகைகளையும் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பொழுதும் தற்பொழுது வரை நடவடிக்கை இல்லை என்றும் அந்த பெண்மணியிடம் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சின்ன தடாகத்தில் மர்மமான முறையில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை சின்ன தடாகத்தில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...