அரசு வழக்கறிஞர்கள் விவகாரம்- கோவை மாவட்ட ஆட்சியருக்கு அபராதம் விதித்த நீதிபதி…

கோவை: அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சி கூறுவதற்கு மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்து ஆஜராகி உள்ளார். கூடுதல் அரசு வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணையும் நடத்த முடியவில்லை என தெரிகிறது.

அரசு தரப்பு தவறால் இது ஏற்பட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகை மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டுமென கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் ஜூன் 30ம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில், கோவை நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் தற்போது வரை இன்னும் நியமிக்கப்படவில்லை.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ; கோவை மாநகராட்சி அறிக்கை!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீயணைப்பு பணியில் பல்வேறு வாகனங்கள் மற்றும் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...