கோவையில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் தையல் செய்து உலக சாதனை!

கோவை: கோவையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் துணிப்பைகள் தைத்து உலக சாதனை படைத்தனர்.

Advertisement

கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நெகிழி பயன்பாட்டுக்கு மாற்றாக துணிப்பைகளை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்பட்டது.

அதேபோல், பெண்களின் சுயதொழில் மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்த உலக சாதனை முயற்சியில் சமூகத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே அரங்கில், ஒரே நேரத்தில் ஊசி மற்றும் நூலை பயன்படுத்தி துணிப்பைகளை தைத்தனர்.

Advertisement

இந்த சாதனை, “World Wonders Book of Records” அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்…

கோவை: கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...