சமூக நல்லிணக்க ஊராட்சி விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027 விண்ணபிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதிபடைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும்.அதனுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

இதனடிப்படையில் 2026-27.ஆம் ஆண்டிற்கான “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து 15.07.2026 0 5.00 விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...