கோவையில் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் (Machine Operator Plastics Processing Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் (Machine Operator Plastics Processing Courseபயிற்சி வழங்கப்படவுள்ளது

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சி சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கால அளவு நான்கு மாதங்கள் ஆகும்பயிற்சி பெறும் காலங்களில் இளைஞர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.2,000/- வீதம் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்புக்கான வழிவகை செய்யப்படும்ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.18,000/ முதல் ரூ.22,000/- வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Power Cut In Coimbatore: கோவை நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் ஜூலை 8 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...