கோவை: கோவை லாட்ஜில் விபசாரம் நடத்தி வந்த புரோக்கர்கள் இருவரை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையிலடைத்தனர்.
சிங்கநல்லூர் போலீசார் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் லாட்ஜ்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கநல்லூர் தனியார் பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு லாட்ஜின் அறை சந்தேகத்திற்கிடமான வகையில் நபர்கள் நடமாடுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கியிருந்த நபர்கள் பெண்களை வைத்து, விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விபசார தொழிலை நடத்தி வந்த ஈரோடு மூலப்பாளையம், கல்யாண சுந்தரம் வீதியைச் சேர்ந்த ஆனந்த் (35) மற்றும் திருப்பூர் ஸ்டேட் பேங்க் காலனி, முதலாவது வீதியைச் சேர்ந்த முகமது ரபி (28) ஆகிய இரு புரோக்கர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
Coimbatore power cut: கோவையில் ஜூலை 13ம் தேதி மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?
இதுகுறித்து போலீசார் சட்டவிரோத வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்டத்திற்கு புறம்பாக விபசாரத் தொழில் நடத்தும் நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.





