திரையரங்கிலேயே விசில் சின்னம் டாட்டூ; கவனம் ஈர்த்த தமிழக வெற்றி கழக நிர்வாகி

கோவை: ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தபோதே, தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொண்ட கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் யுவராஜின் செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாகக் கூறப்படும் ஜனநாயகன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Also Read: இன்றைய ராசிபலன் (ஜூலை 23): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்

கோவை உப்பிலிபாளையம் காஸ்மோ திரையரங்கிலும் முதல் காட்சிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரைப்படம் தொடங்கி சில நிமிடங்கள் ஆனபின், கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் யுவராஜ், இந்த திரைப்படம் தனது மனதில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற நினைவாக, கட்சியின் விசில் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார்.

Advertisement

இதற்காக திரையரங்கில் இருந்து வெளியே வந்த அவர், திரையரங்க நுழைவாயிலிலேயே பச்சை குத்திக் கொண்டார். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் அருகில் இருந்து நிகழ்வைக் கவனித்தார்.

திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே ரசிகர் ஒருவர் தனது கட்சி சின்னத்தை பச்சை குத்திக் கொண்ட இந்த சம்பவம், அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...