கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஆவின் நிறுவனத்தைச் சீரழிவில் இருந்து காப்பாற்றவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தருவதாகத் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்துள்ள நிலையில், மிகக் குறைவாக உயர்த்தினால் ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்ற முடியாது என்றனர். தனியார் பால் நிறுவனங்கள் வழங்கும் கொள்முதல் விலைக்குக் குறையாமல் ஆவின் பாலுக்கும் விலை உயர்த்தப்பட வேண்டும் என்றும் மேலும், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் அரசு தலையீடு இன்றி ஆவின் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தி, உண்மையான பால் உற்பத்தியாளர்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் என கேட்டுக்கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...