கோவை அருகே வீட்டில் 6 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு; வடமாநிலத் தொழிலாளி கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடியை வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில், மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்மோ கீர் மோலா என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், அவர் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சா விதைகளை கொண்டு வந்து, தான் தங்கியிருந்த வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Also Read: காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற குழந்தைக்கு HIV பாதிப்பு! கோவையில் சோகம்…

Advertisement

இதையடுத்து, அல்மோ கீர் மோலா தங்கியிருந்த காசிப்பட்டணம் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 6 அடி உயரத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்மோ கீர் மோலாவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.