யானைகள் மீது மோதிய ரயில்- கோவை எல்லை அருகே சோகம்…

கோவை: கோவை அடுத்த தமிழ்நாடு கேரளா எல்லையில் ரயில் மோதி தாய் யானை மற்றும் குட்டியானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் அடுத்த கேரள மாநில எல்லைக்குள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாய் யானை மற்றும் குட்டியானை ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் வாளையார் அடுத்த கேரள பகுதியில் தாய் யானை மற்றும் குட்டி யானை உட்பட 4 யானைகள் உலா வந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு யானைகள் மீதும் மோதி உள்ளது.

இதில் தாய் யானை குட்டியானை இரண்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன இது குறித்து கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாலை யானையின் உடல்களை மீட்ட வனத்துறையினர் உடல்களை புதைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement

சமீபத்தில் தமிழக எல்லைப் பகுதிக்குள் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது ஆனால் இந்த சம்பவம் கேரளா மாநிலத்திற்குள் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று யானைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த நாளே இரண்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

“மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்” – சுதந்திர தினத்தில் MLA கனிமொழி சந்தோஷ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றிய கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ், மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான கடமை என உறுதியளித்தார்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...