கோவை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சரமாரியாக விமர்சித்து பொள்ளாச்சி ஜெயராமன் காட்டமாக பேசியுள்ளார்.
பயிர் கடன் தள்ளுபடி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர் மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி உட்பட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொள்ளாச்சி ஜெயராமன்அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்தார்.
நடிகர் விஜய் விவசாயிகளுக்கு தேர்தலுக்கு அன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் வேளாண் பட்ஜெட் அறிவிப்பதற்கு முன்பாகவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி குறித்து ஒரு அறைக்கூவல் எழுப்பினார் என்றார்.
விஜய் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்து தான் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது விஜய் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற அவர் இதற்கு விடை கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் கொதித்து எழுவார்கள். விஜய் வீட்டுக்கு அனுப்புவதற்கு முதல் பங்காக விவசாயிகள் போராடுவார்கள் என்றார்.
மேலும் பூமிக்கும் ஆகாயத்திற்கும் கூட கோட்டை கட்டி விடலாம் ஆனால் நடிகர் ஜனநாயகன் விஜயின் வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது என்று விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை கண்டு வேட்பாளர் யார் என்று தெரியாமல் மக்கள் வாக்களித்து விட்டார்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பித்தான் தமிழக மக்கள் ஏமாந்து போனார்கள் என்றார்.
தனி பெரும்பான்மை ஆட்சியாக இன்று ஆட்சி இல்லை திமுக கூட்டணியில் இருந்து சென்றவர்கள் அதிமுகவில் இருந்து ஆதரவளித்த ஒருவர் என்றுதான் ஆட்சி உள்ளது என்றும் கிழிந்த துணியில் ஒட்டு போட்ட ஆட்சியாக தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அதிகபட்சம் இன்னும் 6 அமாவாசைக்கு தான் இந்த ஆட்சி ஓடும் மக்கள் கொதித்து வரும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக தீர்ந்து போன கட்சி என்று கூறுகிறான்
எம்ஜிஆரால் துவக்கப்பட்டு அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம் ஒரு சிலர் பதவிக்காக அவர்களது தலையைக் கூட அடமானம் வைக்கலாம் ஆனால் உண்மையான எம்ஜிஆர் அம்மாவின் தொண்டர்கள் எடப்பாடியார் தொண்டர்கள் தன்மானத்தோடு இருப்பார்கள் யாரைப் பார்த்து தேர்ந்து போன சக்தி என்று கூறுகிறாய் அவன் பல கட்சி மாறியவன் உனக்கே ஒட்டு கோமணம் தான் நீ எங்களைப் பார்த்து பேசுகிறாய் எம்ஜிஆரின் இயக்கத்தை கிண்டல் கேலி செய்தவர்கள் இந்த இயக்கத்தை காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் ஒரு நாளும் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது என்றார்.
இந்த இயக்கம் எடப்பாடியார் தலைமையில்
சிறப்பாக செயல்படும், அண்ணாவின் உருவம் பொழிந்த இந்த அதிமுக கொடி நம் ஒவ்வொருவரின் நெஞ்சின் மேல் போற்றியபடி நாம் சாக வேண்டும், எத்தனையோ சோதனைகளை இந்த கட்சி சந்தித்திருக்கிறது
1996 ஆம் ஆண்டு அம்மாவே தோற்றார்கள் ஆனால் இரண்டு வருடத்தில் பிரதமர் வேட்பாளரையே அவர்தான் தேர்வு செய்தார் என்றார்.
போனால் போகட்டும் இன்னும் மூன்று அமாவாசை தான் உள்ளது இந்த கவர்ச்சி அரசியல் மக்களை வஞ்சித்த ஏமாற்றிய அரசியல் எல்லாம் நீர்த்துப் போகும்
தமிழகத்தை வெகு விரைவில் எடப்பாடியார் ஆள்வார் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக அரசு தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை சட்டமன்றத்தில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வலியுறுத்தியும் அரசு அதை நிறைவேற்றவில்லை என்றார்.
ஐந்து ஏக்கருக்குக் குறைவாக உள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், என்றும் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் பாதியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயி உரிமை அட்டை வழங்கி, ஆண்டுக்கு 15,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்றும், இரண்டு ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் தவெக வாக்குறுதி அளித்திருந்தது ஆனால், பட்ஜெட்டில் இதில் எந்தவொரு கோரிக்கையையும் முதலமைச்சர் சேர்க்கவில்லை இதைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கவே வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது என்றார்.
நிதி நிலைமை மோசமாக இருப்பதால் போகப்போக நிறைவேற்றுவோம் என தவெக அரசு கூறுவது குறித்தான கேள்விக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, தாலிக்குத் தங்கம், ஆடு வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட ஐந்து முக்கியத் திட்டங்களுக்குச் சபை மேடையிலேயே கையெழுத்திட்டுச் செயல்படுத்தினார். ஆனால், தவெக அரசு வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், சில சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்காதது குறித்தான கேள்விக்கு, அது குறித்த சூழல்களைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்க வேண்டும் என்றும், அதிமுக என்பது அசைக்க முடியாத மாபெரும் மக்கள் சக்தி என்பதை திரளான தொண்டர்களுடன் கூடிய இந்த ஆர்ப்பாட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது என்று கூறினார்.
அதிமுகவை தவறாக பொள்ளாச்சி ஜெயராமன் வழிநடத்திகிறார் என்று எஸ் பி வேலுமணி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு ஐயா விடுங்கள் என கூறி சென்றார்.





