கோவை: சினிமாவை போன்று அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என செ.ம.வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
பயிர் கடன் தள்ளுபடி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர் மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி உட்பட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் செ.ம.வேலுச்சாமி உரையாற்றுகையில்
மூன்று மாத காலமாக நாடக ஆடுவது போன்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
காவேரி இல்லாமல் தமிழகம் வரண்டு கிடக்கிறது குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்றார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு, ஆளுகின்ற திறமையில்லாத ஆட்சி போன்று துக்ளக் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்று விமர்சித்தார்.
மேகதாது என்பதை மேகலா என்று தவறுதலாக குறிப்பிட்டு பேசிய அவர் அங்கு அணை கட்டுவதற்காக போராடியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் வேறு எந்த கட்சியும் அதற்காக போராடவில்லை மேகதாது அணை கட்டப்பட்டால் 80% உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றார்.
சினிமாவைப் போன்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அலங்கோலம் செய்து கொண்டிருக்கிறார்கள்
கோவை மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் நான்கு கொலைகள் நடைபெற்று உள்ளது மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
பித்தலாட்டம் நடத்துவதற்காக தற்பொழுது வரி போடப்பட்டு வருகிறது என்றும் சென்னையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது அதனை கோவையிலும் உயர்த்த பார்க்கிறார்கள் என்றார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் வாங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த இயக்கம் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி ஆகியோருக்காக துவக்கப்பட்ட இயக்கம் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு செல்லும் துரோகிகளை பற்றி பேச வேண்டாம், இந்த ஆட்சிக்கான நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.
திமுகவில் கூட்டணியில் இருந்து வந்தவர்கள் தான் தமிழக வெற்றி கழகத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
ஆளுமை இருந்தால் திறமை இருந்தால் தமிழகத்தில் எந்த கட்சி காரனும் தனித்து நிற்க சொன்னால் அவர்கள் தோற்று தான் போவார்கள், அதிமுக கட்சி மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி என்றார்.





